+100 Daily Tamil Current Affairs Question and Answers - October 2018

1) சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் அனுசரிக்கப்படும் நாள்? - செப்டம்பர் 30

2) அக்டோபர் 1 முதல் மத்திய பிரதேச மாநிலத்தின் புதிதாக உதயமான 52 வது மாவட்டம்? - நிவாரி மாவட்டம்

3) விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் நாட்டில் முதல் மாநிலம்? – கர்நாடகா

4) 25வது ஆசிய இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றவர்? - யுவராஜ் வத்வானி

5) 186 கி.மீ கொண்ட “அமைதி பாத்திட்ரா” அமைதிக்கான பேரணி நடைபெற்ற மாநிலம்? – ஆந்திரப்பிரதேசம்

6) மாவோயிச கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்ட அமைதி பேரணியின் பெயர்? - அமைதி பாத்திட்ரா

7) எந்த இந்திய மொழியில் பைபிள் மொழிபெயர்த்து 200வது ஆண்டு கொண்டாடப்பட்டது? – தெலுங்கு

8) காந்தியின் இதயம் துடிப்பது போல டிஜிட்டல் கிட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம்? - தில்லி தேசிய அருங்காட்சியகம்

9) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏழாவது முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி? – இந்தியா

10) அமேசான் & ஆல் இந்திய ரோடியோ இணைந்து தொடங்கியுள்ள சிறப்பு செய்தி சேவை? - அமேசான் அலெக்சா

11) தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் கர்ப்பிணிகளுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ள மாநிலம்? – அசாம்

12) எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) பொது இயக்குனர்? - ரஜினி காந்த் மிஸ்ரா

13) 20-வது கால்நடை கணக்கெடுப்புத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்ட நாள்? - அக்டோபர் 01, 2018

14) பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் (PTI) தலைவர் & துணைத் தலைவர்? - என். ரவி & விஜய் குமார் சோப்ரா

15) பிராந்தியத்திற்கான சிறந்த விமான நிலைய விருது பெற்ற விமான நிலையம்? – இந்தூர் விமான நிலையம்

16) நாட்டின் முதல் சர்வதேச மக்காச் சோளத் திருவிழா எங்கு நடைபெறது? – சிந்த்வாரா (மத்தியப்பிரதேசம்)

17) மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு நடைபெற்ற இடம்? – புது தில்லி

18) பெட்ரோலுக்கு மாற்றாக இந்தியாவில் சுத்தமான, மலிவான மெத்தனாலை அறிமுகம் செய்யும் முதல் மாநிலம்? – அசாம்

19) உலக ராபீஸ் தினம்? – செப்டம்பர் 28 (லூயிஸ் பாஸ்டியர் நினைவு தினம்)

20) ஜார்கண்டின் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய இலக்கிய மற்றும் அறிவார்ந்த மாநாட்டின் பெயர்? – “லோக் மந்தன் 2018”

21) சட்டபிரிவு 497-ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கிய நாள்? – 27.09.2018

22) வானில் இருந்து பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை? – அஸ்திரா

23) ஐ.நா.வின் சுற்றுச்சூழல் விருது பெற்றவர்? – பிரதமர் மோடி

24) இந்தியாவில் எந்த ஆண்டுக்குள் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றுள்ளது? – 2022 க்குள்

25) ஐ.நா.வின் தொழில் முனைவோர் பார்வைக்கான விருது பெற்ற விமான நிலையம்? - கொச்சின் சர்வதேச விமான நிலையம்

26) ஐ.நா.வின் கொள்கை தலைமைப் பிரிவுக்கான விருது பெற்றவர்? - பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் & பிரதமர் மோடி

27) பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கான விளம்பரத் தூதர்? – மேரிகோம்

28) சுற்றுலாத் துறையின் விரிவான வளர்ச்சிக்காக விருது பெற்ற மாநிலம்? – ஆந்திர பிரதேசம்

29) TB யின் அச்சுறுத்தலை எதிர்த்து இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? – அமெரிக்கா

30) 02.10.2018 அன்று மாநிலத்தில் அனைவருக்குமான ஓய்வூதிய திட்டத்தை துவக்கியுள்ள மாநிலம்? – அசாம்

31) ஆயுஷ் தகவல் மையம் எந்த நாட்டில் அமைக்கப்பட்டது? – ருமேனியா

32) 162 நாடுகளில் பட்டியலில் பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்? - 96 வது இடம்

33) அரசியல் சாசனத்தின்படி ஆதார் அடையாள அட்டை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள்? - 26.09.2018

34) 8-வது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ள இடம்? – திருவனந்தபுரம்

35) 2018-ஆம் ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரர்? - லூகா மோட்ரிக் (குரோஷிய கால்பந்து வீரர்)

36) சௌபாக்யா திட்டத்தின் கீழ் 31.12.2018 ம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவுள்ள மாநிலம்? – அசாம்

37) புகழ்பெற்ற “இந்திர ஜத்ரா” திருவிழா கொண்டாடப்படும் இடம்? – காட்மண்டு (நேபாள தலைநகர்)

38) யாருடைய சிலையை ஐ.நா.வில் திறந்துவைத்து “சமாதானத்தின் தசாப்தம்” – என்றும் அறிவித்துள்ளது? - நெல்சன் மண்டேலா

39) அந்த்யோதயா தினமாக அனுசரிக்கப்படும் நாள்? - செப்டம்பர் 25 (பண்டிட் தீன்தயால் உபத்யாயாவின் பிறந்த நாள்)

40) மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ‘காந்தி மார்ச்’ எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நாடு? – நெதர்லாந்து

41) 2017 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்? – லட்சுமி (பல மொழி மூத்த நடிகர்)

42) எளிய வாழ்க்கைக்கான சிறந்த விருது பெறும் மாநிலங்கள்? – ஆந்திரா, ஒடிசா & மத்தியப் பிரதேசம்

43) புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் உலகின் முதல் நாடு? – நேபாளம் (2009-இல் 121 புலிகள் = தற்போது 235) T × 2 திட்டம்

44) சைகை மொழிகளுக்கான முதல் சர்வதேச தினம் கொண்டாடப்பட்ட நாள்? – 23.09.2018

45) 5 ஜி அலைவரிசைக்காக BSNL எந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? – சாப்ட் வங்கி (Japan) & என்.டி.டி கம்யூனிகேஷன்ஸ்

46) முத்தலாக் நடைமுறையைத் தடை செய்யும் அவசரச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்? – 20.09.2018

47) உலகக் கடல் தினம் எப்போது கொண்டப்படுகிறது? – செப்டம்பர் 27

48) ஜோம்ஸ் பி அலிசன் & தசுக்கு ஹோன்ஜோ ஆகியோருக்கு எந்த துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது? – மருத்துவம்

49) முதியோர்களுக்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? – அக்டோபர் 01

50) ரஷ்ய கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார் ? – லூயிஸ் ஹோமில்டன்

51) சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதாரவியலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் ? – #கீதா கோபிநாத்

52) உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் எந்த நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது? – டோக்கியோ

53) காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவில் எங்கு “காதி திருவிழா” தொடங்கப்பட்டது? – மும்பை

54) “வயோஸ் ஸ்ரீத சம்மன் – 2018” விருது தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது? – மதுரை

55) இந்திரா - 2018 (INDRA-2018) எந்த இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி? – இந்தியா & ரஷ்யா

56) IBSAMAR கடற்படைக் கூட்டுப் பயிற்சி தொடரின் ஆறாவது பயிற்சி எங்கு நடைபெறுகிறது? - சிமன்ஸ் டவுன் (IND, BRAZIL & SA)

57) சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி? – சூரியகாந்த்

58) இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி “ரஞ்சன் கோகோய்” எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? – அசாம்

59) அக்டோபர் 1 முதல் பிளாஸ்டிக் தடை அமலாக்கம் கடுமையாக்கப்பட்டுள்ள மாநிலம்? – மகாராஷ்ட்ரா

60) மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு அதிகரிக்க “I Touch Myself” என்ற பாடல் வெளியிட்டவர்? – செரீனா வில்லியம்ஸ்

61) ரோசா என்ற வெப்பமண்டல புயல் தாக்கிய இடம்? - வடமேற்கு மெக்ஸிகோ

62) பங்களாதேஷ் நாட்டின் முதல் பெண் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? - சூசேன் கிட்டி

63) காயகல்ப் விருதுக்கு முதல் இடம் பிடித்து ரூ. 5 கோடி பரிசு பெற்ற மருத்துவமனை? - எய்ம்ஸ் டெல்லி

64) இந்தியாவில் 2018 ஆண்டின் மழைக்காலத்தில் எத்தனை சதவிகிதம் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது? – ஒன்பது சதவீதம்

65) 2018, டிசம்பர் மாதம் 8-வது சர்வதேச உணவு மாநாடு எங்கு நடைபெற இருக்கிறது? – மைசூர்

66) மகாத்மா காந்திக்கு மரணத்திற்கு பிறகு தங்க பதக்கம் வழங்கியுள்ள நாடு? - அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்)

67) கட்டுமான ஒப்பந்தத்திற்காக இந்தியா மற்றும் ஜப்பான் கடன் ஒப்பந்தம் எதற்காக? - மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் & கொல்கத்தா கிழக்கு மேற்கு மெட்ரோ திட்டம்

68) சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி வழிவகை செய்த நாள்? - 28.09.2018

69) 23.09.2018 அன்று ஜர்சுகுடா விமான நிலையம் மற்றும் ஜர்சுகுடா – ராய்ப்பூர் மார்க்கத்தில் உடான் விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த மாநிலம்? – ஒடிசா

70) 2019-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படம்? - வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாம் மொழி & இயக்கம் - ரீமா தாஸ்)

71) சதாத் (SATAT- Scestainable Alternative Toward Affordable Transportation) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய எரிவாயு உற்பத்தி திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? – புதுதில்லி

72) பாரதீய வித்யா பவன் அமைப்பின் மூலம் வழங்கப்படும் மிக உயரிய விருதான தமிழ் மாமணி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? – க.ரத்னம்

73) துருக்கியில் நடைபெற்ற உலக வில்வித்தை பைனல் தொடரின் மகளிர் ரீகர்வ் பிரிவில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார், அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ? – ஜார்கண்ட்

74) இந்தியாவில் உள்ள ரயில்வே பாரம்பரிய இடங்களை இரயில்வே அமைச்சகம்- எந்த நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் (The Railways Lifeline of a Nation) டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது? – கூகுள்

75) மூன்று பேருக்கு 2018ஆம் ஆண்டுக்கான இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, எந்த துறையின் புதிய கண்டுபிடிப்புக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது? – லேசர்

76) ஆசிய வளர்ச்சி வங்கியானது இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதல் பல்திறனுடைய பூங்காவை (First Multi-Skill Park) அமைப்பதற்காக 150 மில்லியன் டாலரை கடனாக வழங்கவுள்ளது? – மத்தியப்பிரதேசம்

77) நிதி ஆயோக் & ஐ.நா. சபை என்ற இரு அமைப்புகளும் இணைந்து இந்தியாவில் எந்த ஆண்டு வரை காலத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான கட்டமைப்பில் (Sustainable Development Framework) கையெழுத்திட்டுள்ளன? - 2019-2020

78) இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பெருகிவரும் பிரச்சனைகளை தடுப்பதற்காக, நிதி ஆயோக்,எந்த நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்த தீர்மானம் செய்துள்ளது? – ஆரக்கிள்

79) அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் பி.ஸ்மித், பிரான்சிஸ் ஹெச்.அர்னால்ட், பிரிட்டனின் கிரிகோரி பி.வின்ட்டர் ஆகியோருக்கு எந்த துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது? – வேதியியல்

80) இந்தியாவின் மூன்றாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் (LNG Terminal – Liquid Natural Gas Terminal) எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது? – முந்த்ரா

81) மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி அக்டோபர் 06 முதல் 13ம் தேதி வரை எங்கு நடைபெற உள்ளது? – இந்தோனேஷியா

82) சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் எந்த அமைப்பானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI – Right of Information Act) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது? - இந்திய கிரிக்கெட் வாரியம்

83) இந்தியாவுடன் இணைந்து, சுற்றுலா, தேசிய பாதுகாப்பு, ராணுவ கல்வி, உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடு? – உஸ்பெகிஸ்தான்

84) சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு – 2018 (First Assembly of International Solar Alliance 2018), எங்கு நடைபெற்றது? – புதுதில்லி

85) இந்தியாவின் முதல் வெள்ளப் பெருக்கு மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (FFEWS – Flood Forecasting and Early Warning System) எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது? – கொல்கத்தா

Post a Comment

0 Comments